திமுக கூட்டணியில் இருப்பவர்கள் கையை பிடித்து இழுத்தாலும் அதிமுக கூட்டணிக்கு வரமாட்டார்கள்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை: திமுக கூட்டணியில் இருப்பவர்கள் கையை பிடித்து இழுத்தாலும் அதிமுக கூட்டணிக்கு வரமாட்டார்கள் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிட அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். கதிர் ஆனந்த் விருப்பமனு அளித்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், திமுக கூட்டணியில் இருப்பவர்கள் கையை பிடித்து இழுத்தாலும் அதிமுக கூட்டணிக்கு வரமாட்டார்கள். கையை பிடித்து இழுத்தாலும் வராதவர்கள், கண்ணடித்தால் மட்டும் வருவார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடிக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி:

வெள்ள பாதிப்பை திமுக அரசு சரியாக கையாளவில்லை என்ற பிரதமர் நரேந்திர மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் துரைமுருகன், வெள்ள பாதிப்பின் போது உதவியவர்களுக்கு மட்டுமே வெள்ளத்தைப் பற்றி பேச உரிமை உண்டு.

வானத்தில் பறந்து கூட பார்க்காதவர்களுக்கு வெள்ளத்தைப் பற்றி பேச உரிமை இல்லை என்று கடுமையாக சாடினார். பிரதமர் மோடி அளித்த உத்தரவாதத்தை நிறைவேற்றினாரா? எனவும் அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். தொகுதி பங்கீடு, கூட்டணி விவகாரத்தில் திமுகவிற்கு பாதகம் இல்லை என்றும் செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.

ஜெயக்குமார் எப்போதும் தமாஷாக பேசுவார்: துரைமுருகன்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எப்போதுமே தமாஷாக பேசுவார் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

The post திமுக கூட்டணியில் இருப்பவர்கள் கையை பிடித்து இழுத்தாலும் அதிமுக கூட்டணிக்கு வரமாட்டார்கள்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: