சுவிட்சர்லாந்தில் ‘தி ரைஸ் – எழுமின்’ அமைப்பு சார்பில் 13 வது உலக தமிழ் தொழிலதிபர்கள் திறனாளர்கள் மாநாடு: ஜூன் 7,8,9ம் தேதிகளில் நடத்தப்படுகிறது சுவிட்சர்லாந்து அதிபர் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்

சென்னை: தி ரைஸ் – எழுமின் அமைப்பின் சார்பில் சுவிட்சர்லாந்து நாட்டில் வரும் ஜூன் 7ம் தேதி 13ஆவது உலகத் தமிழர் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளதாக தி ரைஸ் அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் அவர் பேசியதாவது: உலக அளவில் பொருளாதார சிந்தனைகளையும் செயல் நெறிகளையும் தீர்மானிப்பதில் சுவிட்சர்லாந்து நாட்டில் உலகப் புகழ் பெற்ற பனி மலைகளின் நகரமான டாவோஸ் நகரம் விளங்குகிறது. அதன்படி தி ரைஸ் எழுமின் அமைப்பு நடத்தும் 13 வது உலகத் தமிழ் தொழில் அதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு வரும் ஜூன் 7ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டினை சுவிட்சர்லாந்து அதிபர் திறந்து வைத்திருக்கிறார் மேலும் 40க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் இந்த மாநாட்டினை கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த மாநாட்டில் தமிழர்கள் உள்ளூரில் செய்யும் தகுதி கொண்ட தொழில்களை உலகமயப்படுத்துவது, ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தில் தமிழர்களுடைய உலகளாவிய வலை பின்னல்களை வசப்படுத்துவது, தொழில் வணிக வளர்ச்சிக்கு அடிப்படை தேவையான மூலதனத்தை திரட்ட வழிகாட்டுவது உள்ளிட்டவைகள் மாநாட்டில் பங்கேற்பவர்கள் தொழில் அதிபர்களின் அனுபவங்களிலும் அவர்களின் தொழில்நுட்ப அறிவினையும் பகிர்ந்து கொள்ள இவை வழிவகுக்கும்.

அதேபோல் ஐரோப்பிய பின்னலாடை ஏற்றுமதி, மனிதவளம், கனிமவளம், மீன் உணவு ஏற்றுமதி வனப்பு பொருட்கள் ஏற்றுமதி அனைத்து வழக்கு சரக்கு போக்குவரத்து துறை போன்ற சிறப்புகள் இந்த மாநாட்டில் வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே இது வெறும் கூடி பேசி கலையும் மாநாடு அல்லாமல் எல்லோரும் பயன்பெறும் மாநாடாக நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த மாநாட்டில் பங்கேற்று பயன்பெற விரும்புவோர் www.tamilrise.org என்ற இணையதளம் மூலமாகவும், 9150060032 என்ற எண்களில் தொடர்பு கொள்ள வழிவகை செய்துள்ளோம். அதேபோல் இந்தமாதம் இறுதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு 30% பதிவு கட்டணத்தையும் சலுகையாக தர உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

 

The post சுவிட்சர்லாந்தில் ‘தி ரைஸ் – எழுமின்’ அமைப்பு சார்பில் 13 வது உலக தமிழ் தொழிலதிபர்கள் திறனாளர்கள் மாநாடு: ஜூன் 7,8,9ம் தேதிகளில் நடத்தப்படுகிறது சுவிட்சர்லாந்து அதிபர் மாநாட்டை தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: