தேர்தலுக்காகவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது: சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

சென்னை: தேர்தலுக்காகவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு வைத்துள்ளார். மதுரை தோப்பூரில் 221 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஒன்றிய அரசு 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. 2019 ஜனவரியில் பிரதமர் மோடி ரூ.1264 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்ட அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிக்கான ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ள எல் அண்ட் டி நிறுவனம் இன்று வாஸ்து பூஜையுடன் கட்டுமான பணிகளை துவக்கி உள்ளது. கட்டுமான பணிகளை 2026ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் எம்.பி. குற்றசாட்டு வைத்துள்ளார் அதில்,

தேர்தலுக்காகவே எய்ம்ஸ் கட்டுமான பணி: சு.வெங்கடேசன்

தேர்தலுக்காகவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகளுக்கு பின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

2019-ல் அடிக்கல்… 2024ல் கட்டுமானப் பணி

2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக அடிக்கல் நாட்டப்பட்டது; தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்டுமான பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தொடக்கம்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணியை எல் அண்டு டி நிறுவனம் தொடங்கியது. கீழ் தளம், தரைதளம் மற்றும் 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை கட்டப்படுகிறது. 33 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் கட்டுமான பணிதொடக்கம் தேர்தலுக்கான நாடகம்

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது தேர்தலுக்கான நாடகம். இந்த ஆண்டு டிசம்பரில் பொதுத்தேர்தலாக இருந்திருந்தால் நவம்பரில் கட்டுமான பணியை தொடங்கி இருப்பார்கள். 2 மாதங்களில் 4 முறை தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர், எய்ம்ஸ் கட்டுமான பணியை ஏன் தொடங்கி வைக்கவில்லை. துவங்காத பணியை 2024க்குள் முடித்து விடுவதாக இதுவரை ஒன்றிய அரசு சொல்லி வந்தது ஏன்?. துவங்காத பணியை முடிக்கின்ற தொழில்நுட்பத்தை ஒன்றிய அரசு எங்கு கற்றுக்கொண்டது?. மதுரையோடு அறிவிக்கப்பட்ட 5 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுவிட்டன. அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் என்ன செய்தார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.

The post தேர்தலுக்காகவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது: சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: