மாநிலங்களுக்கு தரும் நிதி பற்றி பொய் தகவல்களை தரும் மோடி: முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில்,‘‘ சமீபத்தில் மேற்கு வங்கத்துக்கு வந்திருந்த பிரதமர் மோடி வீட்டு வசதி திட்டத்துக்காக 2014-15 நிதியாண்டில் ஒன்றிய அரசு ரூ.47,000 கோடி வழங்கியதாக கூறினார். 2014-15 மற்றும் 2021-22 நிதியாண்டுகளில் ஒன்றிய அரசு ரூ.29,834 கோடி ஒதுக்கியது.

இதற்கு மாநில அரசு ரூ.20,000 கோடியை வழங்கியது. ஒன்றிய அரசு ரூ.47000 கோடியை கொடுத்ததாகவும், திட்டங்களுக்கு செலவழிக்காமல் அந்த தொகை விழுங்கப்பட்டுள்ளதாகவும் மோடி புகார் தெரிவித்துள்ளார். 2021-22 முதல் 2023-24ம் ஆண்டுகளில் ஒரு பைசா கூட ஒன்றிய அரசிடம் இருந்து வரவில்லை.

அவர்கள் அளித்த நிதி அனைத்தும் மாநில அரசு விழுங்கி விட்டதாகவும் ஒரு வீடு கூட கட்டப்படவில்லை எனவும் அவர் கூறுகிறார். அந்த நிதியில் இருந்து 43 லட்சம் வீடுகளை கட்டியுள்ளோம். இது போன்ற பொய்யை சொன்னதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார்.

The post மாநிலங்களுக்கு தரும் நிதி பற்றி பொய் தகவல்களை தரும் மோடி: முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: