தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச விசிக தலைவர் திருமாவளவன் முடிவு?

சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச விசிக தலைவர் திருமாவளவன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடளுமன்ற தேர்தலுக்காக திமுக கூட்டணி கட்சிகளோடு திமுக பேச்சுவார்த்தை குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் திமுக – விசிக இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை என்பது கடந்த 20 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. விசிக தரப்பில் 3 தொகுதி, ஒரு பொது தொகுதி என 4 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், விசிக-விற்கு கடந்த முறை போன்று 2 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்திருந்தது.

ஆனால் விசிக தலைவர் திருமாவளவனை பொறுத்தவரையில், திமுக கூட்டணியில் இந்த முறை 3 தொகுதிகள் பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். விசிக தலைவர் திருமாவளவனும் பல பேட்டிகளில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதனிடையே, திமுக பேச்சுவார்த்தை குழு அழைத்தும் 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு விசிக செல்லவில்லை. விசிக-வை பொறுத்தவரை சிதம்பரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 3 தொகுதியை எதிர்பார்ப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச திருமாவளவன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக பேச்சுவார்த்தை குழுவை மீண்டும் சந்தித்து பேசும் முன் முதல்வரை சந்தித்து பேச திருமாவளவன் திட்டமிட்டுள்ளார். ஓரிரு நாட்களில் இந்த சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச விசிக தலைவர் திருமாவளவன் முடிவு? appeared first on Dinakaran.

Related Stories: