×

வைகுண்டம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

வைகுண்டம், மார்ச்4: வைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் துவக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. துவக்க விழாவுக்கு கல்வி அபிவிருத்தி சங்கச் செயலாளர் கோட்டை சண்முகநாதன் தலைமை வகித்தார். பள்ளிச் செயலாளர் முத்தையா, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் தியாகசெல்வன், கல்வி புரவலர் ராஜப்பா வெங்கடாச்சாரியார், விளையாட்டு மைதானத்திற்கு நிலம் வழங்கிய பிரபாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை ராணி வரவேற்றார். இதைத்தொடர்ந்து, ஓய்வுபெற்ற காவல் துறைத்தலைவர் மாசானமுத்து கண்காட்சியை திறந்துவைத்துப் பேசினார். சிறந்த அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்த மாணவ- மாணவிகளுக்கு தாசில்தார் சிவக்குமார், டவுன் பஞ். முன்னாள் தலைவர் கந்தசிவசுப்பு, ஏரல் தொழிலதிபர் ராமகிருஷ்ணன், சர்வதேச மனித உரிமைகள் கழகத் தலைவர் சந்துரு, முன்னாள் மாணவி பூர்ணகலா ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

இதையொட்டி மாணவர்களுக்கு  அகத்திய சன்மார்க்க சங்கத்தின் தளவாய் மதிய உணவு வழங்கினார். அறிவியல் கழகத்தின் பிரதிநிதி சம்பத், அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர்கள் வனிதா, சகுந்தலா, ஆனந்த், பாலையா குழுவினர் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். அறிவியல் கண்காட்சியை பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் பார்வையிட்டு சென்றனர்.

இதில் வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயபாலன் தேவாசீர் துரைராஜ், பாலசுந்தரி, சீனிவாச அறக்கட்டளை விஜயகுமார், டவுன் பஞ்.செயல் அலுவலர் பால்ராஜ், வியாபாரிகள் சங்கத்தலைவர் காளியப்பன், யோகா மாஸ்டர் இசக்கிமுத்து, வக்கீல்கள் சங்கரலிங்கம், சங்கரன், விஏஓக்கள் ரீனா, ஆனந்த், ஆசிரியர்கள்- அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர் என ஏராளமானோர் பங்கேற்றனர். சமூக ஆர்வலர் சந்துரு நன்றி கூறினார்.

The post வைகுண்டம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Science Fair ,Vaikundam School ,Kumaraguruparar ,Swamy Primary ,School ,Vaikundam ,Education Development Association ,Kota Shanmuganathan ,School Secretary ,Muthiah ,Parent-Teacher Association ,President ,Thiagaselvan ,Education Patron ,Rajapa Venkatacharya ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி