×

அறிவியல் கண்காட்சி

போச்சம்பள்ளி, ஏப். 27:போச்சம்பள்ளி அடுத்த சாமல்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில், அறிவியல் கண்காட்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் சர்ஜான் தலைமை தாங்கி, கண்காட்சியை ெதாடங்கி வைத்தார். தலைமை ஆசிரியை சாலம்மாள் முன்னிலை வகித்தார். தன்னார்வலர் ஷாலினி வரவேற்று பேசினார். கண்காட்சியில் 20 மாணவர்கள் கலந்து கொண்டு, பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தினர். மேலும், படைப்புகள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கமளித்தனர். நிகழ்ச்சியில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post அறிவியல் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Science fair ,Bochampalli ,Samalpatti house ,District Teacher Co-ordinator ,Sarjan ,Headmistress ,Salammal ,Shalini ,Dinakaran ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...