சென்னை சைதாப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் இன்று 43,051 மையங்களில் 57 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமீட்டுள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் இன்று சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். தடுப்பு மருந்து கொடுக்கும் முன்பு சோப்பு போட்டு கை கழுவுவது, சானிடைசர் உபயோகப்படுத்துவது கட்டாயமாகும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியம்.

இதேபோல, குழந்தைகளின் வசதிக்காக இன்று முக்கிய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சோதனைச்சாவடிகள், விமான நிலையங்களில் பயண வழி மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாகையில் ரூ.245 கோடி மதிப்பில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட மருத்துவமனையை முதலமைச்சர் நாளை திறந்து வைக்க உள்ளார். குழந்தைத்தனமான காரணத்தை கூறாமல் மதுரை எய்ம்ஸ் கட்டிட பணிகளை ஒன்றிய அரசு விரைந்து முடிக்க வேண்டும். மரங்களை வெட்டாததால் எய்ம்ஸ் பணிகள் தாமதம் ஆவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

The post சென்னை சைதாப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: