7வது மாதமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.. வர்த்தக சிலிண்டர் விலை ரூ.2000ஐ நெருங்கியது!!

சேலம்: வர்த்தக சிலிண்டரின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை, எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.

இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான (மார்ச்) புதிய விலை பட்டியலை இன்று அதிகாலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது. அதில், தொடர்ந்து 7வது மாதமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், கடந்த மாத விலை அதாவது ரூ.918 விலையிலேயே நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதேவேளையில், வர்த்தக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ஒன்றுக்கு 23 ரூபாய் 50 பைசா உயர்ந்து மொத்தமாக ரூபாய் 1960.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உணவு பொருட்களின் விலை மீண்டும் உயரும் வாய்ப்புகள் உள்ளன.

The post 7வது மாதமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.. வர்த்தக சிலிண்டர் விலை ரூ.2000ஐ நெருங்கியது!! appeared first on Dinakaran.

Related Stories: