மல்லசமுத்திரம், பிப்.29: மல்லசமுத்திரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில், நேற்று ₹14 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க, மல்லசமுத்திரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் கருமனூர், அக்கரைப்பட்டி, பாலமேடு, கோட்டப்பாளையம், மங்களம் ஆகிய பகுதியிலிருந்து 625 மூட்டை பருத்தியை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் பி.டி. ரகம் ₹7110 முதல் 7670 வரையும், கொட்டு பருத்தி ₹4270 முதல் 5420 வரை ஏலம் போனது. பருத்தியை கொள்முதல் செய்ய காங்கேயம், ஈரோடு, சேலம், அவிநாசி, கோவை, மகுடஞ்சாவடி ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். நேற்று ₹14 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது. அடுத்த பருத்தி ஏலம் 6ம் தேதி நடைபெறும் என சங்க மேலாளர் கணேசன் தெரிவித்தார்.
The post ₹14 லட்சத்திற்கு பருத்தி விற்பனை appeared first on Dinakaran.