திருப்பதி ஏழுமலையான் கோயில் கவுரவ அர்ச்சகர் பணி நீக்கம்: அறங்காவலர் குழு தலைவர் அதிரடி உத்தரவு

திருமலை: திருப்பதி தேவஸ்தானத்தில் மத உணர்வை சீர்குலைக்கும் விதமாக கவுரவ அர்ச்சகரை பணியில் இருந்து நீக்கி அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் உத்தரவிட்டுள்ளார். திருமலை அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் செயல் அதிகாரி தர்மா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு கருணாகர் பேசியதாவது: தேவஸ்தானத்தில் பணி புரியும் கீழ்மட்ட ஊழியர்களுக்கு கவுரவ ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக பல்வேறு துறைகளில் பணிபுரியும் 9 ஆயிரம் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படும். தேவஸ்தான நிர்வாகம், அதிகாரிகள், ஜீயர் சுவாமிகள், பிரசாத தயாரிப்பு ஊழியர்கள், அகோபிலம் மடத்தின் ஜீயர்கள் குறித்து தொடர்ந்து உண்மைக்கு புறம்பானதை கூறியும், பக்தர்கள் மத்தியில் மத உணர்வை சீர்குலைக்கும் விதமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கவுரவ தலைமை அர்ச்சகராக உள்ள ரமண தீட்சித்தலு பேசியதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலானது.

இதனால் கவுரவ அர்ச்சகர் ரமண தீட்சிதரை பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறது. இவ்வாறு கூறினார். இந்த கூட்டத்தில் செயல் அதிகாரி தர்மா, இணை செயல் அதிகாரி வீரபிரம்மம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பால சுப்ரமணியம், சங்கர், தமிழ்நாடு, புதுச்சேரி மாநில நிர்வாக குழு தலைவர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயில் கவுரவ அர்ச்சகர் பணி நீக்கம்: அறங்காவலர் குழு தலைவர் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: