நேற்று த.மா.கா.. இன்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்..பாஜகவுக்கு தாவும் கூட்டணி கட்சிகள்; அதிருப்தியில் அதிமுக..!

சென்னை : அதிமுக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் விலகியது. அதிமுக கூட்டணியில் இருந்து த.மா.கா. வெளியேறிய நிலையில் 2வது கட்சியாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் விலகியது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் வேலையில் தீவிரம் காட்டி வருகிறது. ஒவ்வொரு கட்சியுடன் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாஜ கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக, தங்களது தலைமையில் புதிய கூட்டணியை அமைப்பதற்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வருகிறார். பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதேபோல், பாஜ தலைமையிலும் பாமக, தேமுதிக, ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில், அதிமுகவுடன் நெருக்கமாக இருந்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று திடீரென பாஜ கூட்டணியில் இணைந்தார். இந்த சூழலில் இன்று அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது. கோவையில் உள்ள தமமுக கட்சித் தலைவர் ஜான் பாண்டியனை நேரில் சந்தித்த பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் ’என் மண் என் மக்கள் யாத்திரை’ நிறைவு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.இந்த அழைப்பை ஏற்று பல்லடத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில், ஜான் பாண்டியன் பங்கேற்கவுள்ளார்.பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தர் கட்சி மற்றும் ஏசி சண்முகம் கட்சி ஆகியவை இணைந்த நிலையில் தற்போது மேலும் ஒரு கட்சியாக ஜான்பாண்டியன் கட்சி இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post நேற்று த.மா.கா.. இன்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்..பாஜகவுக்கு தாவும் கூட்டணி கட்சிகள்; அதிருப்தியில் அதிமுக..! appeared first on Dinakaran.

Related Stories: