சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழுவில் புதிதாக உறுப்பினர்கள் நியமனம்

சென்னை: சென்னை பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் குழுவுக்கு புதிதாக 4 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் கல்வி மற்றும் நிர்வாகம் சார்ந்து மேற்கொள்ள வேண்டிய முடிவுகள், செலவினங்கள், புதிய திட்டங்கள் அந்தந்த பல்கலை. சிண்டிகேட் குழு கூடி விவாதித்து ஒப்புதல் பெறப்படுவது வழக்கம். இந்தக் குழுவில் துணைவேந்தர், பதிவாளர் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் இடம் பெறுவார்கள்.

அதன்படி நிதி நெருக்கடி உட்பட பல்வேறு சிக்கல்களுக்கு இடையே சென்னை பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் குழுவுக்கு புதிதாக 4 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சென்னை பல்கலைக்கழம் வெளியிட்ட அறிவிப்பு: ல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழுவுக்கு உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்கள் 4 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் சென்னை அரும்பாக்கம் டி.ஜி வைஷ்ணவா கல்லூரி இணை பேராசிரியர்(எம்சிஏ) வேல்முருகன், மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி உதவி பேராசிரியர்(தாவரவியல்) ஆனந்த், மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரி இணை பேராசிரியர்(கணிதம்) அனந்த நாராயணன், தாம்பரம் எம்சிசி முதல்வர் வில்சன் ஆகியோர் சிண்டிகேட் குழுவில் இணைந்துள்ளனர். இவர்கள் வரும் 2027 பிப்ரவரி 23ம் தேதி வரை 3 ஆண்டுகள் பதவியில் இருப்பர்.

The post சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழுவில் புதிதாக உறுப்பினர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: