பொது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஆலோசனை: கல்வித்துறை இயக்குநர் பங்கேற்பு

பல்லாவரம்: பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,100 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில், 12ம் வகுப்பு படிக்கும் 300 மாணவர்கள் வருகிற மார்ச்-1ம் தேதி அரசு பொதுத்தேர்வு எழுதுவதற்கு தயாராகி வருகின்றனர். அவர்களுக்கான ஆலோசனை நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குநர் அறிவொளி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளின் தேர்வு பயத்தை போக்கும் வகையில், எவ்வாறு தேர்வு எழுத வேண்டும் மற்றும் தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் அறிவுரை வழங்கினார்.
பின்னர், 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு பிறகு, நீட் தேர்விற்கு தயாராகும் முறை குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதேபோல், மாணவர்களின் ஒழுக்கம், கல்வியில் ஈடுபாடு, தேர்ச்சி மற்றும் நற்பண்புகளை எவ்வாறு உயர்த்துவது என்பது குறித்து ஆசிரியர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் ராமகிருஷ்ணன், பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

The post பொது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஆலோசனை: கல்வித்துறை இயக்குநர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: