×

அரியலூரில் முன்னாள் படைவீரர் குறைதீர் முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “முன்னாள் படை வீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களிடமிருந்து அவர்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் கேட்கப்பட்டதுடன் அவர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 10 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 12 பேருக்கு ரூ.3,08,000 மதிப்பிலான கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் (மு.கூ.பொ) கலையரசி காந்திமதி மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அரியலூரில் முன்னாள் படைவீரர் குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Special Grievance Redressal Day ,Ariyalur District Collector ,Collector ,Anne Marie Swarna ,
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...