ரயில்வே தரை பாலங்கள் அமைக்கும் இடத்தை ஆய்வு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த கல்குமாரம்பட்டி, கே.எட்டிப்பட்டி கிராம பகுதிகளில் ரயில்வே பாதையில் தரை பாலங்கள் அமைக்க இடம் தேர்வு செய்ய கிருஷ்ணகிரி எம்பி செல்லகுமார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கல்குமாரம்பட்டி மற்றும் கே.எட்டிப்பட்டி ரயில்வே பாதையில், தரை பாலங்கள் கேட்டு அப்பகுதி மக்கள் கிருஷ்ணகிரி எம்பி செல்லகுமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பாக செல்லகுமார் எம்பி, சேலம் கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹாவிடம், பகுதி மக்களின் தேவைகளை கூறி ரயில்வே உயர் அதிகாரிகளுடன் நேரில் சென்று இடங்களை ஆய்வு செய்தார். ஆய்வின் போது, கே.எட்டிப்பட்டி கிராம மக்கள், ஏற்கனவே பயன்படுத்தி வந்த ரயில்வே தரைப் பாலத்தை அடைத்தால் பல கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றனர். இதனை ஏற்ற அதிகாரிகள் ஏற்கனவே மக்கள் பயன்படுத்தி வரும் தரை பாலத்தை பயன்படுத்தி கொள்ளலாம். கல்குமாரம்பட்டி மற்றும் கே.எட்டிப்பட்டி ஆகிய கிராமங்களில் ரயில் பாதையில் தரைப் பாலங்கள் அமைக்கும் பணி தொடங்கி விரைவில் முடிவடையும் என்றனர்.

The post ரயில்வே தரை பாலங்கள் அமைக்கும் இடத்தை ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: