பாஜ மீதான அவதூறு விளம்பரம் ராகுல் காந்தி, சித்தராமையாவுக்கு நோட்டீஸ்: பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக, முந்தைய பாஜ அரசு மீது 40 சதவீதம் கமிஷன் குற்றச்சாட்டை கூறிய காங்கிரஸ் கட்சி, முன்னாள் பாஜ முதல்வர் பசவராஜ் பொம்மையை விமர்சித்து ’பே சிஎம்’ என்று போஸ்டர்களை ஒட்டியது. மேலும், பாஜவில் முதல்வர் பதவிக்கு ரூ.2500 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விமர்சித்தனர். இதையடுத்து, காங்கிரஸ் தலைவர்கள் பாஜ மீதும், பாஜ தலைவர்கள் மீதும் பொய்யான அவதூறு விளம்பரங்களை செய்து, பாஜவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக பாஜ சார்பில் 42வது கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஜே.பிரீத், ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகிய 3 காங்கிரஸ் தலைவர்களும் மார்ச் 28ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

The post பாஜ மீதான அவதூறு விளம்பரம் ராகுல் காந்தி, சித்தராமையாவுக்கு நோட்டீஸ்: பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: