காசாவில் ஒரேநாளில் 67 பேர் பரிதாப பலி: இஸ்ரேல் மீது ஈரான் குற்றச்சாட்டு

துபாய்: இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுத குழுவினருக்கும் இடையேயான தொடர்ந்து போர் நடந்து வருகின்றது. இரு தரப்பினரும் மாறிமாறி தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த போரில் ஹமாஸ் குழுவினருக்கு ஈரான் மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறது. இதன் காரணமாக இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வருகின்றது. இந்நிலையில் தெஹ்ரான் அணுசக்தி திட்டத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் மீது பழிசுமத்தப்பட்டுள்ளது. ஈரானில் இயற்கை எரிவாயு குழாய்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கிடையே காசா பகுதியில் நேற்று இரவு இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் 67 பேர் பலியாகி விட்டனர். மத்திய காசாவில் மட்டும் 44 உடல்கள் மீட்கப்பட்டடுள்ளன. டமாஸ்கஸ் மீது ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேலின் தாக்குதலின்போது ஏவுகணைகள் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் சுற்றுப்புறங்களை தாக்கியுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பள்ளிக்கு அருகே இருந்த கட்டிடம் தாக்கப்பட்டதில் 2 பேர் பலியானது உறுதிப்பட்டுள்ளது.

The post காசாவில் ஒரேநாளில் 67 பேர் பரிதாப பலி: இஸ்ரேல் மீது ஈரான் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: