முளைவிட்ட வெந்தய பொரியல்

தேவையானவை:

முளைவிட்ட வெந்தயம் – 50 கிராம்,
பாதியாக வேக விட்ட துவரம் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்,
தேங்காய் பல் – சிறிது,
சர்க்கரை – 2 டீஸ்பூன்,
உப்பு, மஞ்சள் பொடி – தேவைக்கு,
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு.

தாளிக்க:

நெய் – 2 ஸ்பூன்,
கடுகு – ½ டீஸ்பூன்,
மிளகாய் – 2,
கடலைப்பருப்பு,
உளுத்தம் பருப்பு – தலா ½ டீஸ்பூன்,
பெருங்காயம் – சிறிது.

செய்முறை:

முளைவிட்ட வெந்தயத்தை குக்கரில் வைத்து ஒரு விசிலில் வேக விட்டு எடுக்கவும். வாணலியில் நெய் சூடாக்கி தாளிக்கும் பொருட்கள் தாளித்து மஞ்சள் பொடி, கறிவேப்பிலை, வெந்த வெந்தயம், உப்பு, சர்க்கரை, தேங்காய் பல், வெந்த பருப்பு சேர்த்து நன்கு வதக்கி எடுத்து பரிமாறவும். சாதத்தில் பிசைந்து சாப்பிட மற்றும் கலந்த சாதங்களுக்கு ஏற்றது.

The post முளைவிட்ட வெந்தய பொரியல் appeared first on Dinakaran.