×

கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

சிவகங்கை, பிப். 20: சிவகங்கை கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 310 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் ஆஷா அஜித் அறிவுறுத்தினார்.

இதில் தமிழ்நாடு கட்டுமான மற்றும் அமைப்பு சாரா நல வாரியங்களின் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலான விபத்து மரண இழப்பீடு, வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலான உதவித்தொகை உள்ளிட்ட ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன் மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,People's Grievance Redressal Day ,Sivaganga Collector ,Dinakaran ,
× RELATED மாநில அளவிலான போட்டிக்கு கூடைப்பந்து வீரர்கள் இன்று தேர்வு