திருவேங்கடமுடையான் புது பஜனை கோயில் கும்பாபிஷேகம் பக்தர்கள் வெள்ளத்தில் வெகு விமர்சியாக நடந்தது.!


விழுப்புரம்: நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவேங்கட முடையான் கோயில் பஜனை கோவில் புணரமைக்கப்பட்டு ஸ்ரீருக்மணி, சத்திய பாமா சமேத ஸ்ரீவேணுகோபால் கிருஷ்ணனுக்கு கும்பாபிஷேகம் பக்தர்கள் வெள்ளத்தில் வெகு விமர்சியான நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் நல்லாண் பிள்ளை பெற்றாள் திருவேங்கடமுடையான் புது பஜனைக் கோயில் மஹா சம்ப்ரோஷணம் இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு 18.2.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு வாஸ்து பூஜை, கலச பிரதிஷ்டை நடைபெற்றது.

மாலை 4.00 மணியளவில் பகவத் பிரார்த்தனை, யஜமான சங்கல்பம், புண்யாஹ வாசனம், வாஸ்து ஹோமம், பூர்ணாஹுதிக்குப் பின்னர் தீபாராதனை பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 8.00 மணிக்கு தேஜஸ்வி பட்டாச்சாரியார் தலைமையில் கிருஷ்ணகான பஜனை நடைபெற்றது. தொடர்ந்து திங்கள் கிழமை காலை 7.00 மணிக்கு கோ பூஜை, பிரதான கலச பூஜை புறப்பாடும் , திண்டிவனம் நம்மாழ்வார் சபைத் தலைவர் வீரா. வெங்கடேசன் பாகவதர் தலைமையில் திவ்ய பிரபந்த பஜனையும் நடைபெற்றது.

தொடர்ந்து காலை 9.30 மணியளவில் மூலவர் ருக்மிணி, சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணனுக்கு மஹா சம்ப்ரோஷணம், கலசங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மஹா தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவு 8.00 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருவேங்கடமுடையான் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுப்புற கிராம மக்கள், பாகவதர்கள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் மற்றும் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.

The post திருவேங்கடமுடையான் புது பஜனை கோயில் கும்பாபிஷேகம் பக்தர்கள் வெள்ளத்தில் வெகு விமர்சியாக நடந்தது.! appeared first on Dinakaran.

Related Stories: