திராவிட மாடல் அரசுக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு: காதர் மொகிதீன் உறுதி

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் அளித்த பேட்டி: சிறுபான்மை மாணவர்களுக்கு ஒன்றிய அரசு அளித்த கல்வி உதவி தொகையை பாஜ அரசு நிறுத்தி விட்டது. வசதியற்ற லட்சோப லட்சம் சிறுபான்மை மாணவர்கள் கஷ்டப்படுவதை அறிந்து அந்த உதவி தொகையை மாநில அரசே அளிக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இஸ்லாமியர்களின் காதில் இன்ப தேன் ஊற்றியுள்ளார்.

இது இஸ்லாமியர்கள் வாழ்நாளெல்லாம் நன்றி சொல்லும் அறிவிப்பு. பள்ளிவாசல் கட்ட அலைக்கழித்து வந்ததற்கு நிரந்தர தீர்வை முதல்வர் அறிவித்து உள்ளார். இதற்காக ஓட்டுமொத்த முஸ்லிம்கள் சார்பில் முதல்வருக்கு நன்றி. இந்த உலகின் இறுதி நாள் வரை திராவிட மாடல் அரசுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிப்போம்.

The post திராவிட மாடல் அரசுக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு: காதர் மொகிதீன் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: