கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.. பிப்ரவரி மாதத்திற்கான.ரூ.1000 உதவித்தொகை வங்கி கணக்குகளில் டெபாசிட் ஆனது!!

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான ரூ.1000 உதவித்தொகை வரவு வைக்கப்பட்டது.கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 அவரவர் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதை தொடர்ந்து 2ம் கட்டமாக கூடுதலாக மகளிர் உரிமைத்தொகை 7 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு சேர்த்து கடந்த டிசம்பர் மாதம் ரூ.1000 அனுப்பப்பட்டது. இதன்மூலம் மகளிர் உரிமைத்தொகை பெறுவோர் எண்ணிக்கை 1,13,84,300 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நிராகரிக்கப்பட்ட 11.85 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்தனர். இதையடுத்து, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை அரசு நியமித்தது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் கூடுதலாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களில் 2 லட்சம் பேருக்கு ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான ரூ.1000 உதவித்தொகை வரவு வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வரவு வைக்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில் இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பு தீபாவளி பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை ஒட்டி முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.. பிப்ரவரி மாதத்திற்கான.ரூ.1000 உதவித்தொகை வங்கி கணக்குகளில் டெபாசிட் ஆனது!! appeared first on Dinakaran.

Related Stories: