திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியை காங்கிரஸ் இளைஞர் அணிக்கு ஒதுக்க வேண்டும்

 

திருப்பூர், பிப்.13: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் இளைஞர் அணிக்கு ஒதுக்க வேண்டும் என இலக்கிய அணி பேச்சாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட இலக்கிய அணி சார்பாக, பேச்சாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு இலக்கிய அணியின் மாநில தலைவர் பி.எஸ்.புத்தன் தலைமை தாங்கி பேசினார். மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார்.

இலக்கிய அணியின் மாவட்ட தலைவர் துரை விஜயகுமார் வரவேற்று பேசினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் மயூரா ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார். இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் அருண் பிரகாஷ், மாநில எஸ்.சி பிரிவு துணைத் தலைவர் கானபிரியா, திருப்பூர் மாநகர மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஹாஜா, திருப்பூர் மாநகர மாவட்ட 44-வது ரிவிஷன் தலைவர் சுலைமான்,

மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சோஜன் மேத்யூ, 6-வது வார்டு தலைவர் கிருஷ்ணாஸ், மாநகர மாவட்ட செயலாளர் ஈசன் மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரும் தேர்தலில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி தர வேண்டும். அதனை இளைஞர் அணிக்கு ஒதுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியை காங்கிரஸ் இளைஞர் அணிக்கு ஒதுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: