மாநில நீச்சல் போட்டியில் பதக்கங்களை வென்ற தேனி மாணவர்கள்

தேனி, பிப். 11: மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டியில் நீச்சல் போட்டியில் தங்கம் ,வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை தேனி மாவட்ட மாணவர்கள் வென்றனர். தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில், பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் கடந்த 7ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது.

இதில் தேனி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்று வரும் யோகா சங்கமித்ரா என்ற மாணவி 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 3 தங்கப்பதக்கங்களையும், ஜெமினா என்ற மாணவி 1 தங்கம், 2 வெள்ளிப்பதக்கங்களையும், நிஷாதமித்ரா 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 1 தங்கம், 1 வெள்ளிப்பதக்கங்களையும் வென்றனர்.

The post மாநில நீச்சல் போட்டியில் பதக்கங்களை வென்ற தேனி மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: