பொது விநியோக கடைகளில் எண்ணெய் வித்துகளை மானிய விலையில் கொடுக்க வேண்டும்: விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம்

சென்னை: பாமாயிலின் எண்ணெய்க்கு பதிலாக விவசாயிகள் பயிர் செய்யக்கூடிய கடலை எண்ணெய், தென்னை எள்ளு போன்ற எண்ணெய் வித்துகளை பொது விநியோக கடையில் மானிய விலையில் கொடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற கோரி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டம் நடத்தினர். ஒற்றை கோரிக்கையை நிறைவேற்றக் கோரி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறி போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். முன்னதாக நிருபர்களை சந்தித்த விவசாய சங்க கூட்டமைப்பினர், ‘‘எங்களது ஒற்றைக் கோரிக்கை குறித்து அரசுக்கு நெடுநாள் அழுத்தம் கொடுத்தும் தற்போது வரை தீர்வு கிடைக்கவில்லை. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்’’ என்றனர்.

The post பொது விநியோக கடைகளில் எண்ணெய் வித்துகளை மானிய விலையில் கொடுக்க வேண்டும்: விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: