விளையாடிக் கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன்: குஜராத்தில் மீட்புப்பணி தீவிரம்

ஜாம்நகர்: குஜராத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததால், மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலம் ஜாம்நகர் அடுத்த கோவானா கிராமத்தை சேர்ந்த இரண்டு வயது சிறுவன், நேற்று மாலை 6 மணியளவில் அப்பகுதியில் இருந்த ஆழ்துளை கிணற்றில் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். நீண்ட நேரமாக சிறுவன் காணாமல் போனதை அறிந்த பெற்றோர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது, மாயமான சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்திருக்க வாய்ப்புள்ளதாக உறுதி செய்யப்பட்டது. அதன்பின் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது, ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் சிக்கியிருப்பதும், உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதும் தெரியவந்தது. அதையடுத்து மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. ராஜ்கோட்டில் இருந்து மாநில மீட்புக் குழுவினரும், வதோதராவில் இருந்து தேசிய மீட்புக் குழுவினரும் விடிய விடிய சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக கடந்த ஜனவரி மாதம், குஜராத்தின் துவாரகா மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது சிறுமி மீட்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post விளையாடிக் கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன்: குஜராத்தில் மீட்புப்பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: