மின்வாரிய தலைமை வளாக கட்டிடத்தில் சோதனை முறையில் தானியங்கி மின்விளக்குகள்: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தகவல்

சென்னை: மின்வாரிய தலைமை வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் சோதனை முறையில் நவீன தானியங்கி மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு மின்வாரியத்தில் மின் ஆற்றல் சேமிப்பில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மின்வாரிய தலைமை வளாகத்தில் உள்ள மின் தொடரமைப்பு கழக கட்டிடத்தில் சோதனை முறையாக நவீன தானியங்கி அசைவு கண்டறிதல் சென்சார் மூலமாக வளாகத்தின் 12 பொது பயன்பாட்டு இடங்களில் பொருத்தப்பட்டு ஆள் நடமாட்டம் இல்லாத நேரங்களில் ஒளிரும் மின் விளக்குகள் தானாகவே அணைக்கப்பட்டு மீண்டும் ஆள் நடமாட்டம் கண்டறியும் போது தானாகவே ஒளிரும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதேபோல் ஒருங்கிணைந்த மின் குளிரூட்டி சாதனங்களில், ஒரு கலையரங்கம் மற்றும் 3 கலந்தாய்வு கூடங்களில் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டு ஆளில்லாத நேரங்களில் குளிர்சாதன வசதிகள் துண்டிக்கப்படுகிறது. இதன் மூலம் தினசரி நாளொன்றுக்கு சுமார் 500 யூனிட் மின்சாரம் சேமிக்கப்பட்டு வருடத்திற்கு ரூபாய் 15 லட்சம் மின் கட்டணம் சேமிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post மின்வாரிய தலைமை வளாக கட்டிடத்தில் சோதனை முறையில் தானியங்கி மின்விளக்குகள்: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: