அடையாறு ஆற்றின் குறுக்கே சுரங்க பணிகள் 50% நிறைவு; மெட்ரோ நிர்வாக அதிகாரி தகவல்

சென்னை: அடையாறு ஆற்றின் குறுக்கே சுரங்கம் தோண்டும் பணி 50 சதவீதம் முடிவடைந்துள்ளது, என மெட்ரோ நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். ன்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம் 3வது வழித்தடத்தில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது. இந்தப் பணிகளை 2026ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுரங்கப் பாதையாக பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. மொத்தம் 116 கி.மீ. தூரத்திற்கு 42 கி.மீ., கட்டுமானத்திற்கு 23 சுரங்கம் தோண்டும் இந்திரங்கள் கொண்டு வரப்பட்டு அவற்றில் 19 இந்திரங்கள் பல்வேறு இடங்களில் சுரங்கம் தோண்டப்படுகிறது.அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அடையாறு ஆற்றின் அடியில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கியது. இந்த பணிகள் தற்போது 50% சதவீதம் நிறைவடைந்துள்ளது என மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாக அதிகாரி கூறுகையில், ‘‘கிரீன்வேஸ் சாலை மெட்ரோ ரயில் நிலையம் முதல் அடையாறு சந்திப்பு நிலையம் வரையிலான 1.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் இயந்திரம் இன்னும் 3 மாதங்களில் ஆற்றின் தெற்கு கரையை வந்தடையும். மேலும் ஒரு சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஸ்டெர்லிங் சாலையை நோக்கி சுரங்கம் தோண்டுகிறது. இது ஸ்டெர்லிங் சாலையை அடைய இன்னும் 3 மாதங்கள் ஆகலாம். சேத்துப்பட்டு ஏரி வழியாக மற்றொரு இயந்திரம் கீழ்ப்பாக்கம் நோக்கி சென்று ஒரு மாதத்தில் சுரங்கப்பாதை அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அடையாறு ஆற்றின் குறுக்கே சுரங்க பணிகள் 50% நிறைவு; மெட்ரோ நிர்வாக அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: