கோவை: கோவை பீளமேடு ஜி.வி ரெசிடென்ஸி அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக காரில் வந்தவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.