கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் கூட்டம் தலைவர்களின் பதவி ஐந்தாண்டு என்பதை உறுதி செய்ய வேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், ஊராட்சி தலைவர்களின் பதவி ஐந்தாண்டு என்பதை உறுதி செய்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் கூட்டம் நேற்று வாலாஜாபாத்தில் நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் அஜய்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் வள்ளி செல்வம், பொருளாளர் லெனின்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சங்கத்தின் செயல்பாடுகள் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

அப்போது, சமூக ஊடகங்களில் உள்ளாட்சி தேர்தல் மூலம் 2021ல் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கான பதவிக்காலம் டிசம்பர்-2024ல் முடிவடைவதாக உலா வரும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். உள்ளாட்சி நிர்வாகிகளின் பதவிக்காலம் தேர்வு செய்யப்பட்டதில்‌ இருந்து 5 ஆண்டு காலம் என்பதை பஞ்சாயத்து சட்டப்படியும், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படியும் உறுதி செய்யும் வகையில், விளக்கம் அளிக்க மாவட்ட நிர்வாகத்தையும், மாநில அரசையும், தேர்தல் ஆணையத்தையும் கேட்டுக்கொண்டு ஏகமனதாக தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கூட்டத்தில், வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் கூட்டம் தலைவர்களின் பதவி ஐந்தாண்டு என்பதை உறுதி செய்ய வேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: