கவிதாலயம் சார்பில் விருது வழங்கும் விழா

 

ஈரோடு, பிப். 2: ஈரோடு கவிதாலயம் மற்றும் கவிதாலயம் இசைப்பயிற்சி பள்ளி, குமரன் வாட்சஸ், கொங்கு கலையரங்கம் ஆகியவை இணைந்து பரத நாட்டிய மாணவிகளின் அரங்கேற்ற விழா மற்றும் திரைப்பட நடிகை ரேணுகா குமரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா ஆகியவை வருகின்ற 4ம் தேதி ஈரோடு கொங்கு கலையரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

விழாவில் பரதநாட்டிய கலைஞர் மதுமித்ராவின் மாணவிகளான அம்ரிதா, மிருஷ்னா, பூமதி, திவ்யதர்ஷினி, நிவாஷினி ஆகியோரின் பரத நாட்டியம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை குமரன் வாட்சஸ் உரிமையாளர்கள் குமாரசாமி, யுவராஜ், விஜயலட்சுமி, கொங்கு கலையரங்கம் தலைவர் சின்னசாமி, செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் ஹரிராம்சந்த்ரு, கொங்கு வேலுசாமி, சென்னை ஸ்ரீநிதி மற்றும் கவிதாலயம் ராமலிங்கம் ஆகியோர் செய்து வருகின்றனர்.

The post கவிதாலயம் சார்பில் விருது வழங்கும் விழா appeared first on Dinakaran.

Related Stories: