மேற்குவங்க எல்லையில் நடந்த ராகுலின் ஒற்றுமை யாத்திரையில் கார் தாக்கப்படவில்லை: தமிழ்நாடு காங்கிரஸ் விளக்கம்

பீகார்: பீகார், மேற்குவங்க எல்லையில் நடந்த ராகுலின் ஒற்றுமை யாத்திரையில் கார் தாக்கப்படவில்லை என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. பாரத ஒற்றுமை யாத்திரையின் அடுத்த கட்டமாக, பாரத ஒற்றுமை நியாய யாத்திரையை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மணிப்பூரில் தொடங்கினார். இந்த யாத்திரை மேற்கு வங்கத்தை தொடர்ந்து தற்போது பீகார் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று பீகார் மற்றும் மேற்கு வங்க எல்லை பகுதியில் ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரையினை தொடங்கிய போது சில மர்ம நபர்கள் ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல் நடத்தினர். கற்களை கொண்டு வீசியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ராகுல் காந்திக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தில் ராகுல் காந்தி காரின் பின்பக்க கண்ணாடி நொறுங்கியது.

இந்நிலையில் திரளானோர் பங்கேற்ற யாத்திரையில் இருந்து திடீரென பெண் ஒருவர் ராகுலின் காரை நோக்கி வந்தார். கார் முன் பெண் வருவதை கண்டு ஓட்டுநர் உடனே பிரேக் பிடித்தபோது கயிறு பட்டதில் கண்ணாடி உடைந்தது. அப்போது பாதுகாப்பு வட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கயிற்றால் காரின் கண்ணாடி உடைந்தது. மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக மக்கள் தலைவர் ராகுல் காந்தி நீதி கேட்டுப் போராடி வருகிறார். பொதுமக்கள் அவருடன் உள்ளனர், பொதுமக்கள் அவருக்குப் பாதுகாப்பாக உள்ளனர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் அணியினர் விளக்கம் அளித்துள்ளனர்.

The post மேற்குவங்க எல்லையில் நடந்த ராகுலின் ஒற்றுமை யாத்திரையில் கார் தாக்கப்படவில்லை: தமிழ்நாடு காங்கிரஸ் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: