திருப்பூர் மாநகராட்சி அருகே இன்று காந்தி சிலை முன்பு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி: நிர்வாகிகள் பங்கேற்க செல்வராஜ் எம்எல்ஏ அழைப்பு

 

திருப்பூர், ஜன.30: திருப்பூர் மாநகராட்சி அருகே உள்ள காந்தி சிலை முன்பு இன்று மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கலந்துகொள்ள நிர்வாகிகளுக்கு செல்வராஜ் எம்எல்ஏ அழைப்பு விடுத்துள்ளார். திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத நல்லிணக்கத்தின் அடையாளமான அண்ணல் காந்தியடிகள் மத வெறியர்களால் கொல்லப்பட்ட ஜனவரி 30ம் தேதி நாடு முழுவதும் மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். மத சார்பற்ற ஜனநாயக சக்திகள் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். இதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு இந்த கடமை அதிகமாக இருக்கிறது. எனவே இன்று (செவ்வாய்க்கிழமை) மத நல்லிணக்க உறுதி மொழியை ஏற்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி நாடு சந்தித்து வரும் மதவெறி பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும், நாட்டு மக்கள் அனைவரும் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் வகையில், இன்று காலை 8.30 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள காந்தி சிலை முன்பு எனது தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post திருப்பூர் மாநகராட்சி அருகே இன்று காந்தி சிலை முன்பு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி: நிர்வாகிகள் பங்கேற்க செல்வராஜ் எம்எல்ஏ அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: