ஞானவாபி கட்டிடத்தை ஒப்படைக்க வேண்டும்: விஷ்வ இந்து பரிஷத் கோரிக்கை

புதுடெல்லி: உத்தர பிரதேசம்,வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ள இடத்தில் ஏற்கனவே சிவன் கோயில் இருந்தது என்று கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தி 3 நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டது. இந்தநிலையில் விஷ்வ இந்து பரிஷத்தின் செயல் தலைவர் அலோக் குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தொல்லியல் துறை நிபுணர் குழு ஞானவாபி கட்டிடத்தில் சேகரித்த ஆதாரங்கள், ஒரு கோயிலை இடித்துவிட்டுதான் அங்கு மசூதி கட்டப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகின்றன. இதனால், வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991ன் 4வது பிரிவின்படி, இந்தக் கட்டிடத்தை இந்துக் கோயிலாக அறிவிக்க வேண்டும். இரு சமூகங்களுக்கிடையில் இணக்கமான உறவுகளைப் பேண, காசி விஸ்வநாதரின் இடத்தை இந்து அமைப்பிடம் ஒப்படைக்க மசூதி நிர்வாகக் கமிட்டி முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post ஞானவாபி கட்டிடத்தை ஒப்படைக்க வேண்டும்: விஷ்வ இந்து பரிஷத் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: