மகாத்மா காந்தியை விமர்சித்த ஆளுநர் ரவியை கண்டித்து காங்கிரஸ் சார்பில் விராலிமலையில் ஆர்ப்பாட்டம்..!!

புதுக்கோட்டை: மகாத்மா காந்தியை விமர்சித்த ஆளுநர் ரவியை கண்டித்து காங்கிரஸ் சார்பில் விராலிமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜனவரி.23ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

சுபாஷ் சந்திர போஸின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் ஆளுநர் ரவி பேசுகையில், 1942ம் ஆண்டுக்கு பின் மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் பலனளிக்கவில்லை. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இல்லையென்றால் இந்தியா 1947ல் சுதந்திரம் அடைந்திருக்காது. நேதாஜியின் இந்திய தேசிய படை ஆங்கிலேய ராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது.

நேதாஜியே நமது நாட்டின் தேசத்தந்தை. வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களைப் போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும். இந்திய தேசிய காங்கிரசின் போராட்டத்தால் வெளியேறவில்லை என பிரிட்டன் பிரதமர் அட்லி கூறியிருந்தார். இஸ்லாமிய தலைவர்களின் எண்ணப்படி 1947ம் ஆண்டு நாடு இரண்டாக பிரிந்தது. இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்த நிலையில் மகாத்மா காந்தியை விமர்சித்த ஆளுநர் ரவியை கண்டித்து காங்கிரஸ் சார்பில் விராலிமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கரூர் எம்.பி. ஜோதிமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கும்பகோணம் காந்தி பூங்கா முன் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

 

The post மகாத்மா காந்தியை விமர்சித்த ஆளுநர் ரவியை கண்டித்து காங்கிரஸ் சார்பில் விராலிமலையில் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: