ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான கண்காட்சிக்கு 20 ஆயிரம் பார்வையாளர்கள் பாராட்டு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலைதள பதிவு

சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான கண்காட்சியை 20,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பாராட்டி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை 10.30 மணிக்கு சென்னை வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான மாபெரும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை (TN BEAT EXPO 2024) தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி இன்றும் நடக்கிறது.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் த.மோ.அன்பரசன் முன்னிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள மாபெரும் கண்காட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரால் தயாரிக்கப்பட்ட 8,000க்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 5,000க்கும் மேற்பட்ட விற்பனைப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் 410க்கும் மேற்பட்ட காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 20,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு மகிழ்ந்து பாராட்டி வருகின்றனர். இன்றும் நடைபெறும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை வாய்ப்புள்ள அனைவரும் சென்று பார்க்க வேண்டும். உங்களது வருகை ஆதி திராவிட – பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உத்வேகமாக அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான கண்காட்சிக்கு 20 ஆயிரம் பார்வையாளர்கள் பாராட்டு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலைதள பதிவு appeared first on Dinakaran.

Related Stories: