நாட்டின் 75வது குடியரசு தினத்தையொட்டி, கடைமைப் பாதையில் மூவர்ணக் தேசிய கொடியை ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

புதுடெல்லி: நாட்டின் 75வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படது. டெல்லியில் நடக்கும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். விழாவையொட்டி டெல்லி முழுவதும் 70 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ்விழாவில் ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர். விழாவின் முதல் நிகழ்ச்சியாக பிரதமர் மோடி தேசிய போர் நினைவிடத்தில், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பாரம்பரிய சாரட் வண்டியில் நிகழ்ச்சி நடைபெறும் கடமைப்பாதைக்கு அழைத்து வரபட்டனர்.

கடமைப்பாதையில் ஜனாதிபதி முர்மு 21 குண்டுகள் முழங்க மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். அதைத் தொடர்ந்து பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்தியாவின் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையிலான போர் விமானங்கள், ஏவுகணைகள், பீரங்கிகள் காட்சிப்படுத்தப்பட்டது. ஜனாதிபதி முர்மு ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இதில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் 16 அலங்கார ஊர்திகளும் இடம் பெற்றது. இந்த ஆண்டு தமிழ்நாட்டின் சார்பில் அலங்கார ஊர்தியில் குடவோலை முறை காட்சிப்படுத்தப்பட்டது.

The post நாட்டின் 75வது குடியரசு தினத்தையொட்டி, கடைமைப் பாதையில் மூவர்ணக் தேசிய கொடியை ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு appeared first on Dinakaran.

Related Stories: