மகாத்மா காந்தியை இழிவுபடுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும்: வைகோ கண்டனம்

சென்னை: மகாத்மா காந்தியை இழிவுபடுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 127வது பிறந்தநாள் விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , காந்தியை கொச்சைப்படுத்தியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு, மகாத்மா காந்தியின் தியாக சரித்திரம், மாவீரர் நேதாஜி நடத்திய ஆயுதம் தாங்கிய போராட்டம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி எவ்வித வரலாற்று அறிவும் இல்லை என்பதை அவருடைய உரை வெளிப்படுத்தி இருக்கிறது.

இந்திய தேசிய ராணுவத்திற்கு ஜெர்மனியில் ஆதரவு திரட்டும் முயற்சியில் நேதாஜி ஈடுபட்டிருந்தபொழுது, ஹிட்லருக்கு அடுத்த தலைவரான கோயரிங் “மகாத்மா காந்தி பிரிட்டிஷாருக்கு எதிரான கருத்து கொண்ட போல்ஷ்விக் கையாள்” என்று குற்றம் சாட்டிய போது நேதாஜி கடும் கண்டனம் தெரிவித்தார். மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கூட்டத்தின் செயல்பாடுகளை இன்றளவும் போற்றிப் பாசுரம் பாடுகிற ஆர்.எஸ்.எஸ்.சின் பிரசாரகராக ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு மகாத்மா காந்தியை இழிவுபடுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மகாத்மா காந்தியை இழிவுபடுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும்: வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: