நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராகுல்காந்தியை நிச்சயம் கைது செய்வோம்: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேச்சு

திஸ்பூர்: நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராகுல்காந்தியை நிச்சயம் கைது செய்வோம் என அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி மணிப்பூரில் தொடங்கிய நீதி யாத்திரை கடந்த வியாழனன்று அசாமை வந்தடைந்தது. அசாமில் 8 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள ராகுல் முடிவு செய்திருந்தார். இந்நிலையில் வடக்கு லக்கீம்பூரில் ராகுலின் யாத்திரையை வரவேற்கும் போஸ்டர், பேனர்கள் கிழித்து சேதப்படுத்தப்பட்டன. யாத்திரையில் பங்கேற்ற வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. ஹைபோராகானில் உள்ள ஸ்ரீசங்கர் தேவ் சத்ரா கோயிலுக்கு செல்வதற்கு ராகுல்காந்திக்கு அதிகாரிகள் அனுமதி தரவில்லை.

அதனை கவுகாத்தியில் நீதி யாத்திரை நுழைந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் யாத்திரையை அனுமதிக்க முடியாது என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா தெரிவித்து இருந்தார். இதேபோல் நேற்று கவுகாத்திக்கு சென்ற ராகுல் தலைமையிலான நீதி யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். பொறுமையிழந்த அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்த தடுப்புகளை அகற்றி முழக்கமிட்டனர். அப்போது தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனிடையே இதையடுத்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ராகுல் காந்தி மக்களை இதுபோன்ற வன்முறை செயலுக்குத் தூண்டுவதாக குற்றம் சாட்டினார்.

மேலும் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு பரிந்துரைத்தார். அதன்படி ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சிப்ஸாகர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “ராகுல் காந்தியின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழு இதுகுறித்து விசாரணை நடத்தும். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராகுல்காந்தியை நிச்சயம் கைது செய்வோம்; தேர்தலுக்கு முன்பு ராகுலை கைது செய்தால் அது அரசியலாக்கப்படும் என்று கூறினார்.

The post நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராகுல்காந்தியை நிச்சயம் கைது செய்வோம்: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: