தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளியில் புதிய அரங்கம், முகப்பு தோரண வாயில் திறப்பு

தூத்துக்குடி, ஜன. 25: தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளியில் புதிய அரங்கம் மற்றும் முகப்பு தோரண வாயிலை பி.டி.அரசகுமார், லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தின் சார்பாக நடைபெற்று வரும் விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முகப்பு தோரண வாயில், பள்ளி உள் அரங்கம் திறப்பு விழா மற்றும் ஆண்டுவிழா நடைபெற்றது. பேராயர் ராபர்ட் கால்டுவெல் சபை மன்ற தலைவர் செல்வின்துரை ஆரம்ப ஜெபம் செய்தார். திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமை வகித்தார். திருமண்டல அனைத்து பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங் முன்னிலை வகித்தார். பள்ளியின் துணை முதல்வர் ஆட்லின் ஷெனி வரவேற்றார். திருமண்டல குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்றக் ஆகியோர் சிறப்பு ஜெபம் செய்தனர்.

அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் பி.டி.அரசகுமார் கலந்து கொண்டு உள் அரங்கின் கல்வெட்டை திறந்து வைத்தார். லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் முகப்பு தோரண வாயிலை திறந்து வைத்தார். பள்ளியின் ஆண்டுவிழாவில் கே.ஜி. முதல் 10ம் வகுப்பு வரை கல்வியில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவியருக்கு அரசகுமார், நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் ஆகியோர் பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். பள்ளி தாளாளர் இன்ஸ்டீன் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கினார்.

திருமண்டல பொருளாளர் டேவிட்ராஜ், பேராயர் ராபர்ட் கால்டுவெல் கல்லூரி தாளாளர் எபனேசர் மங்களராஜ், போப் கல்வியியல் கல்லூரி தாளாளர் சாலமோன் பொன்ராஜ், கால்டுவெல் கூடைப்பந்தாட்ட அகாடமி தலைவர் கிருபாகரன் ஜோசப் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். திருமண்டல உபதலைவரும், பள்ளித் தலைவருமான தமிழ்ச்செல்வன் நிறைவு ஜெபம் செய்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் இன்ஸ்டீன், துணை முதல்வர் ஆட்லின் ஷெனி, ஒருங்கிணைப்பாளர்கள் ஞான சௌந்தர்யா, இவாஞ்சலின் சான்ட்ரா, ஜெர்லின், மெர்சிபா, கனிச்செல்வி, பிரான்சியா உள்ளிட்ட ஆசிரியைகள் செய்திருந்தனர்.

The post தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளியில் புதிய அரங்கம், முகப்பு தோரண வாயில் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: