உலகம்பட்டி பெரிய அந்தோணியார் கோயில் திருவிழா ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல்: தாடிக்கொம்பு ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் செபஸ்தியார் என்பவர் உயிரிழந்தார். உலகம்பட்டி பெரிய அந்தோணியார் கோயில் திருவிழா ஜல்லிகட்டில் மாடு முட்டியதில் செபஸ்தியார் என்பவர் உயிரிழந்துள்ளார்.

திண்டுக்கல் அருகே உலகம்பட்டியில் 100 ஆண்டுகள் பழமையான புனித பெரிய அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 750 காளைகள் மற்றும் 430 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.

மதுரை, திருச்சி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 500 காளைகள் கலந்து கொண்டன. ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன் மாடுபிடி வீரர்களுக்கு 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் உடல் பரிசோதனை செய்யப்பட்டு களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், காளைகளுக்கும் 27 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் காளைகளை முழுமையாக பரிசோதித்தனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்ட செபஸ்தியார் என்பவர் காளை முட்டி உயிரிழந்தார். மாடு முட்டி காயமடைந்த காமாட்சிபுரத்தைச் சேர்ந்த செபஸ்தியார் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

 

The post உலகம்பட்டி பெரிய அந்தோணியார் கோயில் திருவிழா ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: