கொள்ளு பொங்கல்

தேவையானவை:

கொள்ளு 1 கப்,
பச்சரிசி 2 கப்,
மிளகு,
சீரகம் தலா ½ டீஸ்பூன்,
நெய் 50 கிராம்,
இஞ்சி சிறிது,
உப்பு தேவைக்கு,
கறிவேப்பிலை சிறிது,
முந்திரி 6.

செய்முறை:

கொள்ளை வறுத்து, கரகரப்பாக பொடித்து (ரவை பதம்), 15 நிமிடங்கள் ஊறவைத்து, ஊறியவுடன் பச்சரிசி சேர்த்து 2 கப் நீர் சேர்த்து வேகவிடவும். தேவையான உப்பு சேர்த்து குழைவாக வேகவிட்டு கிளறி இறக்கவும். வாணலியில் நெய்விட்டு மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து இறக்கவும். ஆரோக்கிய கொள்ளு பொங்கல் ரெடி.

The post கொள்ளு பொங்கல் appeared first on Dinakaran.