கூடாரவல்லியை முன்னிட்டு ஆண்டாளுக்கு அக்காரவடிசல் படையல் வைத்து வழிபாடு

திருவில்லிபுத்தூர்: மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடல்களை பாடி பெருமாளை வழிபடுவது வழக்கம். இதில் மார்கழி மாதம் 27-ந் தேதி வழிபாடு செய்வது கூடாரவல்லி என அழைக்கப்படுகிறது. இந்த வழிபாடு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில்களில் பிரபலமாக உள்ளது. இந்த நாளில் அக்காரவடிசல் மற்றும் வெண்ணெய் படைத்து வழிபடுவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று கூடார வ்லலி என்பதால் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று காலை ஆண்டாள், ரங்கமன்னார் ஆகியோருக்கு அக்காரவடிசல் வைத்து படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதேபோல் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலிலும் 108 அக்கார வடிசல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி இரண்டு கோவில்களிலும் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா மற்றும் உறுப்பினர்கள், நிர்வாக அதிகாரி முத்துராஜா, கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post கூடாரவல்லியை முன்னிட்டு ஆண்டாளுக்கு அக்காரவடிசல் படையல் வைத்து வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: