மதுரையில் ஜல்லிக்கட்டுக்காக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம்: பெயர் சூட்டியது தமிழக அரசு இம்மாத இறுதியில் திறப்பு

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில், சுமார் 66 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.61 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு அரங்கம் அமைத்துள்ளது. அரங்கத்தை நேற்று அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை கலெக்டர் சங்கீதா, சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டுக்காக உருவாக்கப்பட்ட பிரமாண்ட அரங்கத்தை, ஜனவரி இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். விழாவில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பங்கேற்கின்றனர். திறப்பு விழா நாளில் அரங்கத்தில் மிகப்பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த அரங்கத்திற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் என பெயர் சூட்டிய முதல்வருக்கு இப்பகுதி மக்கள் சார்பில் நன்றி. இவ்வாறு கூறினார்.

The post மதுரையில் ஜல்லிக்கட்டுக்காக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம்: பெயர் சூட்டியது தமிழக அரசு இம்மாத இறுதியில் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: