நாளைய உலகை ஆளவிருக்கும் இளையோருக்கு, தேசிய இளைஞர் நாளில் இனிய வாழ்த்துகள்: கமல்ஹாசன் வாழ்த்து!

சென்னை: தேசிய இளைஞர் நாளையொட்டி கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12ம் தேதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1984ம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை “தேசிய இளைஞர் நாளாக” அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் ஜனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் , தலைவருமான கமல் ஹாசன் தனது X தள பக்கத்தில்; எதிர்காலம் சிறக்க, நிகழ்காலம் அடித்தளம் இடவேண்டும். இளைஞர்களின் மனங்களாலும் கரங்களாலுமே இன்றைய உலகம் சுழல்கிறது. நாளைய உலகை ஆளவிருக்கும் இளையோருக்கு, தேசிய இளைஞர் நாளில் இனிய வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

 

The post நாளைய உலகை ஆளவிருக்கும் இளையோருக்கு, தேசிய இளைஞர் நாளில் இனிய வாழ்த்துகள்: கமல்ஹாசன் வாழ்த்து! appeared first on Dinakaran.

Related Stories: