நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.1.10 கோடியில் சாலை பணிகள் தொடக்கம்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி 45வது வார்டுக்கு உள்பட்ட பூவன்குடியிருப்பு குறுக்கு சாலைகளில் ரூ.90 லட்சம் மதிப்பீடில் தார் சாலை அமைக்கும் பணி, 14-வது வார்டுக்குட்பட்ட வடசேரி, கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் முன்பாக செல்லும் சாலையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். உடன் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன், மண்டல தலைவர்கள் ஜவகர், முத்துராமன், மாமன்ற உறுப்பினர்கள் சதீஷ், கலாராணி, மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர் சேக் மீரான், ஜீவா, மாநகர துணைச்செயலாளர் வேல்முருகன்இ அணிகளின் நிர்வாகிகள் அகஸ்தீசன், சரவணன், லதா கலைவாணன், ஜெமிலா அந்தோனி, சுரேஷ், வட்ட செயலாளர்கள் சிவகுமார், ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்களிடம் இருந்து மேயர் மகேஷ் மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் 15 மனுக்கள் அளிக்கப்பட்டன. பின்னர் மாநகராட்சி தரைத்தளத்தில் ஏடிஎம் வசதியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆணையர் ஆனந்த் மோகன், பொறியாளர் பாலசுப்ரமணியம் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.1.10 கோடியில் சாலை பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: