ரெஸ்டாரண்ட் ஸ்டைல் தந்தூரி சிக்கன்

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கி ( லெக் பீஸ்)
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
தயிர் – 1 கப்
வெண்ணெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கனை மஞ்சள்தூள் சேர்த்து கழுவி எடுத்துக்கொள்ளவும். மஞ்சள்தூள் கிருமி நாசினி என்பதால் அதனை சேர்த்து சிக்கனை கழுவும்போது கிருமிகள் அழியும். இப்பொழுது சிக்கனை ஒரு பௌலில் போட்டு அதில் உப்பு, மிளகுத்தூள் எலுமிச்சை சாறு, தயிர் சேர்த்து 15 நிமிடம் ஊறவைக்கவும். அதனிடையே கடாயில் வெண்ணெய் சேர்த்து அது உருகியதும், மஞ்சத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, மல்லித்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் அடுப்பை சிறிதாக வைத்து வதக்கவும்.

இப்பொழுது ஊறவைத்த சிக்கனில் இதனை சேர்த்து கிளறவும். இதனை 10 நிமிடங்கள் ஊறவிடவும். இப்பொழுது கடையில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து வறுக்கவும். 2 நிமிடங்களுக்கு ஒரு முறை திருப்பி போடவும். நன்கு வெந்ததும் அடுப்புக்கரி துண்டை நெருப்பில் வைத்து அதனை கிண்ணத்தில் மாற்றி அதன்மேல் வெண்ணெய் சேர்த்து சிக்கன் நடுவில் வைத்து காற்று புகாதவாறு 5 நிமிடம் மூடி வைக்க வேண்டும். 5 நிமிடம் கழித்து இறக்கி பரிமாறினால் தந்தூரி சிக்கன் தயார்.

The post ரெஸ்டாரண்ட் ஸ்டைல் தந்தூரி சிக்கன் appeared first on Dinakaran.