குறு, சிறு தொழில் நிறுவனங்களின் மூலம் ரூ.6 ஆயிரத்து 603 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

*கலெக்டர் கிறிஸ்துராஜ் தகவல்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.6 ஆயிரத்து 603 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறினார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்த நிகழ்ச்சியை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் நேரலையில் பார்வையிட்டார்.

இது குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக தொழில்துறையில் அதிக முதலீடுகளை ஈர்த்து அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிட தொடர்ந்து தொழில் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக, தொழில்துறையின் சார்பில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2 நாட்கள் சென்னையில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 நிகழ்வில் கண்காட்சி, கருத்தரங்கம், வாங்குவோர் மற்றும் விற்பனையாளர் சந்திப்பு கூட்டங்கள் நடைபெற உள்ளது. தொழில் வளர்ச்சி, தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிக்கான இம்மாநாட்டின் நிகழ்வுகளை மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் அறிந்து பயன்பெறும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களில் காணொலியினை காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாடு 2024-ன் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தொழில் முனைவோர், தொழில் சங்கபிரதிநிதிகள் பயன்பெறும் வகையில் நேரடியாக ஒளிபரப்பபட்டது. மேலும், தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிகழ்ச்சிகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கே.எஸ்.சி அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெய்வாபாய் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி குமார்நகர், பழனியம்மாள் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

உடுமலைப்பேட்டை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலைப்பேட்டை, என்.சி.பி நகராட்சி மேல்நிலைப்பள்ளி, தாராபுரம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளி நத்தக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி, காங்கயம் ராமச்சந்திரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி பெதப்பம்பட்டி மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி, குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி,

குண்டடம் பி.வி.கே.என் மேல்நிலைப்பள்ளி, பொங்கலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கொடுவாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்குளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிக்கண்ணா அரசுகலைக்கல்லூரி, திருப்பூர், எல்.ஆர்.ஜி அரசு பெண்கள் கலைக்கல்லூரி, திருப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பல்லடம், பார்க் கல்லூரி, திருப்பூர், அரசு தொழில் பயிற்சி நிறுவனங்கள் திருப்பூர், தாராபுரம், உடுமலைபேட்டை ஆகிய இடங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதனை ஏராளாமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நேரடி நிகழ்வை பார்வையிட்டனர். திருப்பூர் மாவட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சார்பில் குறு தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.111.5 கோடி மதிப்பிலான 37 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், சிறு தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.6,374.34 கோடி மதிப்பிலான 397 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.117.4 கோடி மதிப்பிலான 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் என மொத்தம் ரூ.6,603.24 கோடி மதிப்பிலான 439 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், பிரிண்டிங் மற்றும் கயிறு குழுமங்களின் பிரதிநிதிகள், தொழில் சங்க பிரதிநிதிகள், தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

The post குறு, சிறு தொழில் நிறுவனங்களின் மூலம் ரூ.6 ஆயிரத்து 603 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் appeared first on Dinakaran.

Related Stories: