சென்னை: செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் மழை பெய்து வருகிறது. திம்மாவரம், ஆத்தூர், பரனூர், சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. காட்டாங்கொளத்தூர் மற்றும் பொத்தேரி உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது.